| 245 |
: |
_ _ |a பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a நக்கன் பரமேஸ்வரர் கோயில் |
| 520 |
: |
_ _ |a பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கற்றளியாகும். தாங்குதளம் முதல் முடி வரை கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தளங்கள் இன்றி காணப்படுகின்றது. எனவே விமானம் இன்ன பாணியென்று அறியக்கூடவில்லை. கருவறை சதுர வடிவமானது. கருவறையில் சோழர்கால இலிங்கம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப நுழைவு வாயிலில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறை விமானத்தின் மூன்றுபுறமும் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் வடக்கில் பிரம்மனும், மேற்கில் திருமாலும் உள்ளனர். தெற்கில் உள்ள தென்முகக் கடவுள் சிற்பம் பிற்காலத்தியது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம் போன்ற உறுப்புகள் அமைந்துள்ளன. கூரைப்பகுதியில் பூதவரிகள் செல்கின்றன. கருவறை தேவக்கோட்டங்களில் தெற்கில பிற்காலத்திய தென்முகக் கடவுளும், மேற்கில் முற்காலக் கலைப்பாணியான திருமாலும், வடக்கில் புராதன நான்முகனும் அமைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில் சிறிய, எளிய கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இருக்குவேளிர் கல்வெட்டுகளும், பிற்காலப் பாண்டியர் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டும் இங்கு இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழ் செல்லும் பூதவரிகள் சிறப்பானவை. |
| 653 |
: |
_ _ |a திருச்சி கோயில்கள், திருச்சி பழுவூர் கோயில், பழுவூர் கோயில், பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில், முற்காலச் சோழர் கலைப்பாணி, முதலாம் பராந்தக சோழன் கலைக் கோயில், நக்கன் பரமேஸ்வரர் |
| 710 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
| 905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
| 914 |
: |
_ _ |a 10.93746807 |
| 915 |
: |
_ _ |a 78.42504904 |
| 916 |
: |
_ _ |a சுந்தரேஸ்வரர், நக்கன் பரமேஸ்வரர் |
| 927 |
: |
_ _ |a முதலாம் பராந்தகன் காலக் கல்வெட்டுகளும், கொடும்பாளுர் குறுநில மன்னன் இருக்குவேளிர் கல்வெட்டுகளும், பிற்காலப்பாண்டிய மன்னன் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டும் இக்கோயிலில் காணப்படுகின்றன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறை தேவக்கோட்டங்களில் உள்ள பிரம்மா, விஷ்ணு சிற்பங்களும், துவாரபாலகர் சிற்பங்களும், கருவறை விமானத்தின் கிரீவப்பகுதியில் உள்ள நந்திகளும் முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தவை. இச்சிற்பங்கள் முற்காலச் சோழர் கலைப்பாணிக்கு சான்றாகத் திகழ்கின்றன. |
| 932 |
: |
_ _ |a பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கற்றளியாகும். தாங்குதளம் முதல் முடி வரை கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தளங்கள் இன்றி காணப்படுகின்றது. எனவே விமானம் இன்ன பாணியென்று அறியக்கூடவில்லை. கருவறை சதுர வடிவமானது. கருவறையில் சோழர்கால இலிங்கம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப நுழைவு வாயிலில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறை விமானத்தின் மூன்றுபுறமும் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் வடக்கில் பிரம்மனும், மேற்கில் திருமாலும் உள்ளனர். தெற்கில் உள்ள தென்முகக் கடவுள் சிற்பம் பிற்காலத்தியது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம் போன்ற உறுப்புகள் அமைந்துள்ளன. கூரைப்பகுதியில் பூதவரிகள் செல்கின்றன. |
| 933 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a கோபுரப்பட்டி சிவன் கோயில், ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில், துடையூர், பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில், பாச்சில் அமலேஸ்வரர் கோயில் |
| 935 |
: |
_ _ |a சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் குளித்தலை செல்லும் சாலையில் பழுவூர் உள்ளது. பழுவூரில் சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
| 937 |
: |
_ _ |a திருச்சி, குளித்தலை, பழுவூர் |
| 938 |
: |
_ _ |a திருச்சி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a திருச்சி விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000033 |
| barcode |
: |
TVA_TEM_000033 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_முகப்பு-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_முகப்பு-0001.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_கருவறை-நுழைவாயில்-0002.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_மேற்குபுறம்-0003.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_கோயில்-0004.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_சுவர்-0005.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0006.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_சுவர்-0007.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0008.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_கிழக்குமுகத்தோற்றம்-0009.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_விஷ்ணு-0010.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_தூண்-0011.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_கூரை-0012.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_வாயிற்காவலர்-0013.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_வாயிற்காவலர்-0014.jpg
TVA_TEM_000033/TVA_TEM_000033_சுந்தரேஸ்வரர்-கோயில்_தகவல்-பலகை-0015.jpg
|